Wednesday 12 April 2017

தமிழன் ஒரு பொறுக்கி, தேச துரோகி, கருப்பன் - இனி?

தமிழன் ஒரு பொறுக்கி, தேச துரோகி, கருப்பன் - இனி?

வீ ஸ்ரீவத்சன், சேர்மன் மற்றும் நிர்வாக ஆசிரியர், சாணக்யன் குரல்

சமீபத்தில் ஒரு வீடியோ பார்க்க நேர்ந்தது! அதில் இந்தியாவில் உள்ள அனைத்து தொலைக்காட்சிகளும் (தமிழ் செய்தி தொலைக்காட்சிகள் உட்பட) மீனவர்களை இரு பிரிவாக பார்ப்பதை உணர முடிந்தது! ஒரு பிரிவு "இந்திய மீனவர்கள்" மற்றொன்று "தமிழக மீனவர்கள்"!  ஒரு மீனவன் எந்த மாநிலத்தை சேர்ந்தவன் ஆனாலும் அவன் இந்திய மீனவன்! ஆனால் தமிழ்நாட்டை  சேர்ந்தவன் "தமிழக மீனவன்"! இதில் இருந்து இந்தியா நமக்கு என்ன செய்தி சொல்கிறது? விரிவாக பாப்போம்!

முதல் முறையாக தருண் விஜய் என்ற நச்சு பாம்பு திருவள்ளுவர் என்ற முகமூடியுடன் தமிழகத்தில் நுழைந்த போது, இந்த தருண் விஜயை தமிழகமே கொண்டாடியது  (திமுக மற்றும் அதன் ஆதரவாளர்களான வைரமுத்து, சுப வீரபாண்டியன், நக்கீரன்) மற்றும் நடுநிலை ஊடங்களான பலவும் (குறிப்பாக தினமலர், துக்ளக், ஜூனியர் விகடன்)  வரிந்து கட்டி ஆதரித்தன! இவர்கள் சொல்லாமல் விட்டது  ஒன்றே ஒன்றுதான் - "திருவள்ளுவரின் மறு பிறப்பு தான் தருண் விஜய் என்று! ஆனால் அன்றே சாணக்யன் குரல் சொன்னது "தருண் விஜய் ஒரு முடிச்சி அவுக்கி என்று!  (இந்துத்துவா, தருண் விஜய், தமிழ்??!!! என்ற தலைப்பில் சாணக்யன் குரல் பிப்ரவரி 2015 இதழ்)

தருண் விஜய் தென்னிந்தியர்கள் கறுப்பர்கள் எனவும் கறுப்பர்கள் மட்டமானவர்கள் என்ற அர்த்தத்திலும் பேசி இருக்கிறார். தருண் விஜய்க்கு பதில் சொன்ன திமுகவின் அதிகாரபூர்வ செய்தி தொடர்பாளர் DKS இளங்கோவனும் தனது ஒரிஜினல் நிறமான கருப்பை மட்டமாக நினக்கிறார். தென்னிந்தியர்கள் அனைவரும் கறுப்பர்கள் அல்ல, கருணாநிதியும், ஜெயலலிதாவும் வெள்ளையானவர்களேஎன்பது கருப்பை மட்டமாக, தாழ்வாக நினைக்கும் உள்மன  வெளிப்பாடுதான்.  திமுக எப்போதும் உருப்படாது என்பதற்கு இந்த அறிக்கை ஒரு சிறந்த அத்தாட்சி!

அப்பனை போல ஸ்டாலினும் தான் சிவப்பு - அதனால் தான் என்னவோ இளங்கோவனை விட்டு அப்படி ஒரு கேவலமான அறிக்கையை விட வைத்து இருக்கிறார்!

கருப்பு தமிழிசை, கருப்பு பொன்னாருக்கெல்லாம்  மானம், ஈனம், சூடு, சொரணை எதுவுமே கிடையாதா? இல்லை அவர்கள் தமிழச்சிக்கு பிறக்கவில்லையா? என்ற கேள்வியும்  உலகம் தழுவிய கருப்பு தமிழர்களிடையே எழுகிறது!

சுப்ரமணியசாமி தொடர்ச்சியாக தமிழர்களை பொறுக்கி என்கிறார்! இதற்கு பதில் அளிக்கிறேன் பேர்வழி என சிவப்பு தமிழன் கமலகாசன் ஆமாம் நாங்கள் தமிழ் பொறுக்கி என்கிறார்! யார் கமலுக்கு தமிழர்களை தமிழ் பொறுக்கி என சொல்ல உரிமை கொடுத்தது? தமிழர்களை பொறுக்கி என்று சொன்ன சுப்ரமணியசாமி எப்படிப்பட்ட இழிபிறப்போ அதைவிட இழிவான பிறப்பு தான் கமல் என நாம் சொல்லலாமா? அது சரியாக இருக்குமா?

தமிழகத்தின் துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் - மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி அளித்துவிட்டு, ஆட்சி போனதும் அந்த திட்டத்தை எதிர்க்கும் அவலநிலை தமிழக்தில் நிலவும்போது - தமிழனை எவனும் பொறுக்கி என்பான், கருப்பன் என்பான், தேசத்துரோகி என்று தான் சொல்வான்!

பெங்களூரு சிறை சாலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்த போது தினமலர் ஒரு செய்தி வெளியிட்டது! சிறைச்சாலையில் ஜெயலலிதா ஊதுவத்தி உருட்டுகிறார், அதற்கு அவருக்கு ஒரு நாள் கூலியாக ருபாய் 50 வழங்கப்படுகிறது என்று! (அடுத்த நாளே அது சிறைத்துறை உயர் அதிகாரியால் மறுக்கப்பட்டது வேறு  விஷயம்)! இது போன்ற கேடு கெட்ட பத்திரிகைகள் இருக்கும் தமிழகத்தில் உள்ள தமிழர்களை எவனும் பொறுக்கி என்பான், கருப்பன் என்பான், தேசத்துரோகி என்று தான் சொல்வான்!
ஜெயலலிதா என்ற அந்த ஒரு ஆளுமை இருந்த வரை அவனவன் நவ துவாரங்களையும் மூடி கொண்டு இருந்தான்! அந்த தமிழகத்தின் காவல் தெய்வம் தன் கடைசி மூச்சை நிறுத்திய நொடியில்  இருந்தே தமிழர்களை கேவலமான இழிபிறவிகள் எல்லாம் கழுவி கழுவி ஊற்றுகின்றன!

இந்த அநியாயத்தை எல்லாம் தட்டி கேட்க தமிழகத்தில் இன்று எந்த வலுவான தலைமையும் இல்லை என்பதே வேதனையான உண்மை!

மானங்கெட்ட கருப்பு தமிழன், பொறுக்கி தமிழன், தேச துரோகி தமிழன் கொதித்து எழுந்தால் தான் இதற்கு விடிவு பிறக்கும்!


http://chanakyankural.blogspot.in/                                                                                       chanakyankural@gmail.com



Tuesday 4 April 2017

ஆர் கே நகர் தொகுதி இடைதேர்தல் - "சாணக்யன் குரல்" மெகா கருத்து கணிப்பு

ஆர்.கே.நகர் தொகுதியில்வரும் ஏப்ரல் 12-ம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தேர்தல் களம் கன ஜோராய் சூடுபிடித்துள்ளது. வேட்புமனு ஏற்பு முடிந்துகட்சிகள் பிரச்சாரம் ஆரம்பித்ததும் சாணக்யன் குரல் களத்தில் குதித்தது! நமது நிருபர்கள் மற்றும் பயிற்சி நிருபர்கள் கிட்டத்தட்ட 17 பேர் பல தரப்பட்ட சாமானிய வாக்காளர்களை சந்தித்து திரட்டிய தகவல்களை - உள்ளது உள்ளபடியே இங்கு தொகுத்து வழங்குகிறோம்!

எச்சரிக்கை: இது, கார்ப்பரேட் நிறுவனங்கள் என கூறிக்கொண்டுஅறிவியல் பூர்வ சர்வேபுவியியல் பூர்வ சர்வேபதினெட்டாயிரம் பேரை சந்தித்தோம். கிழித்து விட்டோம்மாட்டி விட்டோம்என்றெல்லாம் பொய் சொல்லாமல் – சாதாரணசாமானிய  மக்களை சந்தித்து அவர்கள் சொன்னதை அப்படியே தொகுத்து இங்கே வழங்குகிறோம்! எங்களின் ஒரே பலம் அரசியல் புரிதல்சாமான்ய மக்களை பற்றிய புரிதல் மற்றும் மனோ தத்துவ ரீதியான அணுகுமுறை மட்டுமே!

மற்றொரு எச்சரிக்கை: கடந்த 2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் கிட்டத்தட்ட அனைத்து ஊடங்கங்களும் திமுக தான் வெற்றி பெறும் என அடித்து சத்தியம் செய்யாத குறையாக உள்நோக்கத்தோடு கூறிய போதுவெகு வெகு சில ஊடகங்களே (டைம்ஸ் நவ்சாணக்யன் குரல், தந்தி டிவிகுமுதம் ரிப்போர்ட்டர்) அதிமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கூறியது - அந்த வெகு சிலவற்றில் சாணக்யன் குரல் கருத்து கணிப்பு முக்கியத்துவம் பெற்றது! இது எங்களை தொடர்ந்து கவனித்து வரும் வாசகர்களுக்கும், நண்பர்களுக்கும்சக ஊடகங்களுக்கும் மிக நன்றாகவே தெரியும்!! சாணக்யன் குரல் டைம்ஸ் நவ் போலவோ, தந்தி டிவி போலவோகுமுதம் குழுமம் போலவோ பிரபலமான ஊடகம் கிடையாது! ஆனால் உண்மையையார் சொன்னாலும் அது உண்மைதான்எப்போதும் அது உண்மைதான்!

மேலும் முழுமையான கருத்து கணிப்பை படிக்க...

https://drive.google.com/file/d/0B2-V7L_yPv0IVHBrNVVtQW9qNTg/view
Complete Survey

Monday 6 February 2017

அ இ அ தி மு க வில் மாற்றத்தை சாணக்கியன் குரல் வரவேற்கிறது!

அ இ அ தி மு க வில்  மாற்றத்தை சாணக்கியன் குரல் வரவேற்கிறது!

வீடியோ பார்க்க மேலே  கிளிக் செய்யவும்!


Saturday 18 April 2015

Wednesday 15 April 2015

ஜெயா டிவி "நடந்தது என்ன" நிகழ்ச்சி - 12 ஏப்ரல் 2015 - கருணாநிதியின் ராமானுஜ காவியம் - வீடியோ

ஜெயா டிவி "நடந்தது என்ன" நிகழ்ச்சி - 12 ஏப்ரல் 2015 - கருணாநிதியின் ராமானுஜ காவியம் - வீடியோ 


தமிழ் புத்தாண்டு 2015-16 மன்மத வருட ராசி பலன்கள்

தமிழ் ஜோதிட தந்தை வீரராகவ அய்யங்கார்


1955ல் பிறந்தவர்கள் இரண்டாவது முறையாக மன்மத வருடத்தை வரப்போகிற சித்திரை மாதம் ஒன்றாம் தேதி - 14-04-2015 செவ்வாய் கிழமை அன்று மீண்டும் சந்திக்க போகிறார்கள்! 60 வருடங்களாக பிரித்து அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு காரண பெயர் வைத்து அதற்கான பலன்களையும் ஒவ்வொரு ராசிக்கும் ஜோதிட சாஸ்திரம் தெளிவாக கூறுகிறது. இந்த சித்திரை தமிழ் புத்தாண்டு  மிக சிறப்பான ஒரு ஆண்டு. வளம் கொழிக்கும், வாழ்வு சிறக்கும். பெண்களுக்கு மிக சிறப்பான ஆண்டு, நல்ல மழை பெய்யும், மக்களுக்கு மகிழ்ச்சி பெருகும். இவை பொதுவான பலன்கள். ஏழை எளியவர்களுக்கு உணவளிப்பது, நம்மால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்வது, பைரவருக்கு (நாய்களுக்கு) பசி ஆற்றுவது, கோவில் திருப்பணிகளுக்கு மற்றும் அன்னதானங்களுக்கு நம்மால் முடிந்த அளவு உதவுவது, எதிலும் வேகம் காட்டாமல் நிதானமாக செயல்படுவது போன்ற விஷயங்கள் அனைத்து ராசி அன்பர்களுக்கும் நல்ல பலன்களை ஏற்படுத்தும். நல்லதே நடக்கும். எமது பரிபூர்ண ஆசிகள்.

தமிழ் புத்தாண்டு 2015-16 மன்மத வருட ராசி பலன்கள்/ அடுத்த இதழில்...விரைவில்...

ரகசிய கேமரா - இது கோவா கோல்மால்!

ரகசிய கேமரா - இது கோவா கோல்மால்!


கோவா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த மத்திய மனிதவள மேம்பாட்டு துறை மந்திரி ஸ்மிரிதி இராணி அம்மாநிலத்தின் காண்டோலிம் பகுதியில் உள்ள பேப் இண்டியா ரெடிமேட் கடையில் சில துணிகளை வாங்கினார். பின்னர் அந்த உடை தனது உடலுக்கு பொருத்தமாக உள்ளதா? என்பதை சரிபார்ப்பதற்காக கடையினுள் இருந்த உடை மாற்றும் அறைக்குள் நுழைந்தார். அப்போது, வெளியே காத்திருந்த மந்திரியின் உதவியாளர், உடை மாற்றும் அறையை குறிவைத்தபடி ஒரு ரகசிய கேமரா பொருத்தப்பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டார். உடனடியாக, மந்திரி ஸ்மிரிதி இராணிக்கு இது தொடர்பான தகவலை தெரிவித்து எச்சரித்தார். 

“அக்ரி அரஸ்ட்” - அரண்டு போன அதிமுக தலைகள்

“அக்ரி அரஸ்ட்”


- அரண்டு போன அதிமுக தலைகள்

தவறு செய்தால் தண்டனை என்பது மற்ற கட்சிகளில் எப்படியோ, அ தி மு க வில் கண்டிப்பாக உண்டு. அதற்கு சமீபத்திய உதாரணம் முன்னாள் அமைச்சர் அக்ரி கிரிஷ்ணமுர்த்தியின் அரெஸ்ட். இந்த வழக்கு சி பி சி ஐ டி வசம் ஒப்படைக்க படும்போதே அ தி மு க தலைமை தெளிவான சில உத்தரவுகளையும் வழங்கியது. நேர்மையாக விசாரணை நடக்க வேண்டும். தவறு செய்தது உறுதி செய்யப்பட்டால், யாராக இருந்தாலும் பிடித்து உள்ளே போடுங்கள் என்பதே அது. இந்த வழக்கை விசாரித்து வரும் அதிகாரிகளுக்கும் ஒரு தகவல் சொல்லப்பட்டுள்ளது. உங்களுக்கு இந்த வழக்கில் யாராவது அழுத்தம் கொடுத்தால் அதை உடனே மேலிடத்துக்கு தெரிய படுத்த சொல்லியதுதான், என்கின்றனர் நமக்கு தெரிந்த காக்கி வட்டாரங்கள். அக்ரிக்கு நெருக்கமான சிலர் கூட மேற்படி தகவலால் அலெர்ட் ஆகி அடக்கி வாசிக்க ஆரம்பித்தனர் என போகிறது கதை.

“காலம் செய்யும் கோலம்” பா.ஜ.க.வில் இருந்து ஓரம் கட்டப்படும் அத்வானி

“காலம் செய்யும் கோலம்”

பா.ஜ.க.வில் இருந்து ஓரம் கட்டப்படும் அத்வானி

இந்திய மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர்.  2002 முதல் 2004 வரை இந்தியாவின் துணைப் பிரதமராகப் பணி ஆற்றினார். பாரதீய ஜனதா கட்சி இவரை மே 2009-ல் நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக பரிந்துரைத்தது. வெறும் 2 தொகுதி வெற்றியுடன் ஆரம்பித்த பா.ஜ.க வின் வெற்றிப்பாதை, அத்வானியின் ரத யாத்திரைகளால் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு உயர்ந்தது.

Friday 3 April 2015

சனி பெயர்ச்சி பலன்கள் மற்றும் 2015-ம் ஆண்டுக்கான ராசி பலன்கள்

சனி பெயர்ச்சி பலன்கள் மற்றும் 2015-ம் ஆண்டுக்கான ராசி பலன்கள் & அரசியல்வாதிகளுக்கான ஸ்பெஷல் டிப்ஸ்!

தமிழ் ஜோதிட தந்தை வீரராகவ அய்யங்கார்



ஒரு சூரியன் ஆயிரம் கோடி ஜீவன்களுக்கு வெளிச்சம் தருவது போல், சனி பகவானும் ஒவ்வொரு ஜீவராசிகளையும் அவற்றின் செயல்களையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார். அவர் நம்முடன் எப்போதும் இருக்கிறார் என்று ஆணித்தரமாக இன்றைக்கும் நிரூபித்து வருகிறார். அதனாலேயே சனி பெயர்ச்சி என்றாலே பலருக்கும் ஒரு கிலி. அது தேவை இல்லாதது என்பதே ஜோதிட உண்மை.

ஜய வருடம் மார்கழி மாதம் 1-ம் தேதி செவ்வாய் கிழமை (16.12.2014) கிருஷ்ண பட்சத்து தட்சணாயன புண்ய காலம் ஹேமந்த ருது, ஆக்ரஹாயனம், தசமி திதி, அஸ்தம் நட்சத்திரம், சௌபாக்யம் நாமயோகம், பத்தரை நாம கரணம், நேத்தரம், ஜீவனம், சித்தயோகம் கூடிய சுபயோக, சுப தினத்தில் பஞ்ச பட்சியில் காகத்தின் வல்லமை காலத்தில் மதியம் 2 மணி 44 நிமிடத்திற்கு சனிப்பெயர்ச்சி நிகழ் பெற்றது.

இப்போது சனிபகவான் துலாம் ராசியை விட்டு விலகி விருச்சிகம் ராசிக்குள் நுழைகிறார். இங்கு 16.12.2014 முதல் 17.12.2017 வரை அமர்ந்து தன்னுடைய கதிர்வீச்சுகளை உலகெங்கும் செலுத்திக் கொண்டு இருக்கிறார்.

சனீஸ்வரரை பார்த்து யாரும் பயப்பட தேவையில்லை. உண்மையில் அவர் தரும் தொல்லைகளை விட நன்மைகள் அதிகம். கீழ் குறிப்பிட்டுள்ள சனி காயத்ரி ஸ்லோகத்தை தினமும் உச்சரிப்பதின் மூலம் அனைத்து நன்மைகளையும் உங்களுக்கு சனீஸ்வரர் வழங்குவார். இந்த சனி பெயர்ச்சி மூலம் சனீஸ்வரர் நம்மிடம் எதிர்பார்ப்பது, கடவுளின் குழந்தைகளான விலங்கு மற்றும், பறவைகளுக்கு  (அதாவது நாய், பூனை, மாடு, காகம், குருவி போன்ற ஜீவராசிகள்) உணவளிப்பது, ஏழை, எளியவர்களுக்கு உதவுவது, நல்ல மனதுடன், யாருக்கும் கெடுதல் நினைக்காமல் இருப்பது என்பதே. இதை செய்தால் சனீச்வர பகவானின் பூரண ஆசியை பெற்று உங்களுக்கு நல்லது நடக்க போவதை நீங்களே கண்கூடாக பார்க்க போகிறீர்கள் என்பதே ஜோதிட உண்மை.

சனீச்வர காயத்ரி
“ஓம் காகத்வஜாய வித்மஹே
கட்க அஸ்தாய தீமஹி
தன்னோ மந்த ப்ரசோதயாத்”

இனி ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களின் சனி பெயர்ச்சி மற்றும் 2015 ஆண்டு பலன்களை பார்ப்போமா!

Monday 16 March 2015

"சாணக்யன் குரல்" மார்ச் 2015 இதழ் இப்போது புத்தக கடைகளில்...

"சாணக்யன் குரல்" மார்ச் 2015 இதழ் இப்போது தமிழகம் மற்றும் புதுச்சேரி புத்தக கடைகளில்... விரைவில் நமது இணையத்தில்...




புது டெல்லி மற்றும் மும்பையில் சாணக்யன் குரல் பத்திரிகை விற்பனைக்கு பிரபல புத்தக கடைகளில் கிடைக்கிறது ...

Sunday 15 March 2015

சாணக்யன் குரல் பிப் - 2015 இதழை இணையத்தில் படிக்க...


சாணக்யன் குரல் பிப் - 2015 இதழை இணையத்தில் படிக்க கீழ் உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்... 

Chanakyan Kural Feb 2015 - Wrapper
Chanakyan Kural Feb 2015 Magazine


Thursday 30 October 2014

சனி பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 விரைவில்

சனி பெயர்ச்சி பலன்கள் 2014 - 2015 விரைவில்




துல்லியமான துளியும் பொய் கலப்பு இல்லாத உள்ளதை உள்ளபடி சொல்லும் இந்த சனி பெயர்ச்சி பலன்களை ஐம்பது வருடத்திற்கும் மேலாக பாரம்பரியம் கொண்ட ஜோதிடர்,  தலைசிறந்த ஜோதிட வார பத்திரிகையான "எதிர் காலம்" இதழில் துணை ஆசிரியராகவும், தினத்தந்தி பத்திரிகையில் ஐயா ஆதித்தனார் அவர்களுடன் பணி புரிந்தவரும், இந்தியாவிலேயே முதல் முறையாக தபால் மூலம் எளிய முறையில் ஜோதிட பயிற்சி அளித்தவரும், பல ஜோதிட ஆராய்ச்சி நூல்களை எழுதியவரும், மேலும் பல புத்தகங்களை எழுதி கொண்டு இருப்பவரும், தனக்கு இறைவன் அளித்த ஜோதிட திறனை வியாபாரமாக கருதாமல் மக்கள் சேவையாக கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு ஆன்மீக சேவை செய்து வரும்   பிரபல ஜோதிடர் திரு வீரராகவ அய்யங்கார்  இந்த சனி பெயர்ச்சியில் வெற்றி பெற போக வேண்டிய கோவில்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள் போன்ற அரிய ஆன்மீக, ஜோதிட தகவல்களை சாணக்யன் குரல் வாசகர்களுக்காக விரைவில் வழங்கவிருக்கிறார்.

Sunday 5 October 2014

ஜோதிடம் - பிறந்த ராசியும் அந்த ராசியில் பிறந்தவர்களின் குணாதிசயங்களும்…

ஜோதிடம்
பிறந்த ராசியும் அந்த ராசியில் பிறந்தவர்களின்  குணாதிசயங்களும்


 ஜோதிட தந்தை வீரராகவ அய்யங்கார்

Thursday 2 October 2014

பலன் தருமா பயிர்க்காப்பீட்டுத் திட்டம்?

பலன் தருமா பயிர்க்காப்பீட்டுத் திட்டம்?


மழையையே பெரிதும் நம்பியுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும் திட்டமாக விளங்குவது பயிர்க்காப்பீட்டுத் திட்டம். இயற்கைச் சீற்றங்களால் பயிர்கள் அழியும்போது விவசாயிகளுக்கு ஏற்படும் பேரழிவை போக்கிடும் திட்டமாக தேசிய வேளாண் காப்பீட்டுத்திட்டம் என்ற பெயரில் பயிர்க்காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வந்தது.

இந்தத் திட்டத்தின்படி, காப்பீடு செய்யப்படும் தொகைக்கான காப்பீட்டுக் கட்டணம், அதாவது பிரிமியம், பயிர் மற்றும் பருவத்திற்கு ஏற்றாற்போல் இரண்டு விழுக்காடு முதல் 3.5 விழுக்காடு வரை இருந்தது. இந்தக் காப்பீட்டுக்கட்டணத்தில், 50 விழுக்காடு தொகையை தமிழ்நாடு அரசே செலுத்தி வந்தது. மீதமுள்ள தொகையை விவசாயிகள் செலுத்தி வந்தனர்.

காப்பாற்ற போனவர்கள் மீது கல்வீச்சு…

காப்பாற்ற போனவர்கள் மீது கல்வீச்சு


காஷ்மீர் சோகம்


காஷ்மீரில் இயற்கை ஏற்படுத்திய மிகப்பெரிய வெள்ளச்சேதம், அதனால் ஏற்பட்ட உயிரழப்புகள், வீடு, வாசல் இழந்து தவிக்கும் மக்கள் என தவியாய் தவிக்கிறது அந்த மாநிலம். தேசிய பேரழிவாக அறிவித்து 1000 கோடி நிதி உடனடியாக அறிவித்து இருக்கிறது மத்திய அரசு. தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் ரூ 5 கோடி நிதி தமிழக அரசு சார்பாக வழங்கி இருக்கிறார். மேலும் பல மாநிலங்களும், பொது நல அமைப்புகளும் உதவிக்கரம் நீட்டி இருக்கின்றன. சகஜ நிலை இன்னமும் திரும்பவிட்டாலும் ஓரளவு நிலைமை சீரடைந்து இருக்கிறது. இந்த சீரமைப்பில் முக்கிய பங்கு வகித்தவர்கள் நமது இந்திய ராணுவ வீரர்கள். தங்கள் உயிரையும் துச்சமாக மதித்து காஷ்மீரில் வெள்ளத்தின் கோர பிடியில் சிக்கிய மக்களை காப்பாற்றி இருக்கிறார்கள். இந்த மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட சில ராணுவ வீரர்களும் தங்கள் உயிரை இழந்திருப்பது பெரிய துயரம்.